ரஃபேல் போர் விமானத்துக்கு சிறப்பு பூஜை; எலுமிச்சம் பழம் மீது ஏறி புறப்பட்டது

ரஃபேல் போர் விமானத்துக்கு சிறப்பு பூஜை; எலுமிச்சம் பழம் மீது ஏறி புறப்பட்டது

2 mins read
0e405910-a1aa-4604-aa0b-723d043276d8
-

பாரிஸ்: பிரான்சிடமிருந்து இந்தியா வாங்கும் 36 ரஃபேல் போர் விமானங்களில் முதல் விமானம் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது.

புதிய விமானத்துக்கு இந்தியா சிறப்புப் பூஜைகளை நடத்தி பெற்றுக் கொண்டது.

தெற்கு பிரான்சில் மெரினியாக்கில் உள்ள தஸால்ட் ஏவியேஷன் தளத்தில் புதிய விமானத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பிரெஞ்சு ஆயுதப் படைகளின் அமைச்சர் ஃபுளோரன்ஸ் பார்லியும் பங்கேற்றார்.

புதிய விமானத்தைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், அதற்கு 'ஓம் எனத் திலகமிட்டு தேங்காயும் பூக்களையும் வைத்து பூஜை செய்தார்.

விமானத்தின் சக்கரத்துக்கு அடியில் வைக்கப்பட்ட எலுமிச்சம் பழங்கள் மீது ஏறி விமானம் புறப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய ராஜ்நாத் சிங், நம்முடைய விமானப் படை உலகின் 4வது பெரிய விமானப் படை என்று குறிப்பிட்டார்.

"நம்முடைய விமானப் படையில் ரஃபேல் விமானங்கள் சேர்க்கப் பட்டதால் மேலும் வலுவடைந்து உள்ளது என்றார்.

இதே நிகழ்ச்யில் பேசிய பிரான்ஸ் அமைச்சர் ஃபுளோரன்ஸ் பாா்லி, "இந்தியாவுடன் மேற் ்கொண்டுள்ள நீண்ட பயணத்தின் தொடக்கம் இது," என்றார்.

திரு ராஜ்நாத் சிங், ரஃபேல் விமானத்தில் ஏறி பயணமும் செய்தார். அவருடன் விமானப் படைத் தளபதி ஹர்ஜித் சிங் அரோராவும் சென்றார்.

முன்னதாக பிரான்ஸ் அதிபா் இமானுவல் மெக்ரோனை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார்.

சுமார் 35 நிமிடங்கள் நீடித்த பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவு குறித்து விவாதிக்கப்பட் டது.

வரும் 2022ஆம் ஆண்டில் எஞ்சிய 35 போர் விமானங்களையும் இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப் படைக்கவிருக்கிறது.