சுற்றுப்பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர்

சுற்றுப்பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர்

1 mins read
f045efa0-0877-4bee-b07b-c562cc5be806
-

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைவிட்டு வெளியேறுமாறு சுற்றுப்பயணிகளுக்கும் யாத்ரீகர்களுக்கும் ஆலோசனை விடுத்த இந்திய அரசாங்கம், அவர்களை மீண்டும் அம்மாநிலத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நிலவிய அமளியால், பாதுகாப்பு அபாயத்தைக் கருதி சுற்றுப்பயணிகள் அங்கு போகாதபடி இந்திய அரசாங்கம் எச்சரித்திருந்தது. அந்த அறிவிப்பு வெளிவந்த நேரத்தில் அங்கு 20,000 முதல் 25,000 சுற்றுப்பயணிகள் இருந்தனர்.

இந்த எச்சரிக்கையால் இந்தியாவின் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள், யாத்ரீகர்கள், ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் வெளியேறவேண்டி இருந்தது.

குறிப்புச் சொற்கள்