பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்தது. பெங்களூருவின் வடபகுதியில் உள்ள தோதரபித்தரகல்லு உள்ளிட்ட இடங்களில் 110 மில்லி மீட்டர் மழை ஒரேநாள் இரவில் கொட்டித் தீர்த்தது. இதுபோல பகலகுந்தே பகுதியில் 100 மி.மீ மழை பெய்தது. இதனால் இங்குள்ள ஏரி நிறைந்து தண்ணீர் சாலைகளில் நிரம்பியது. தாழ்வான பகுதிகளில் ஏரி தண்ணீர் சூழ்ந்ததால் பெங்களூருவில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் வழக்கத்தைக் காட்டிலும் நடப்பாண்டில் 15 விழுக்காடு கூடுதல் மழை பெய்து உள்ளதாக அம்மாநில அமைச்சர் ஆர்.அசோக் கூறினார்.
கர்நாடகாவில் வெள்ளம்
1 mins read

