எம்எல்ஏவுக்கு சிறைத் தண்டனை

எம்எல்ஏவுக்கு சிறைத் தண்டனை

1 mins read

தன்பாத்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன் போலிசாரை தாக்கி, குற்றவாளியைக் கூட்டிச் சென்ற வழக்கில் பாஜக எம்.எல்.ஏ., துலு மாதோவுக்கு, ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ துலு மாதோ மீது 2013ல் ஒரு குற்ற வழக்கில் கைதுசெய்யப்பட்ட ராஜேஷ் குப்தா என்பவரை விடுவிக்க போலிசாரை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், எம்.எல்.ஏ., துலு மாதோ உட்பட நான்கு பேருக்கு ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.