ஊடுருவல்: பங்ளாதே‌ஷை சேர்ந்த 5 பேர் கைது

ஊடுருவல்: பங்ளாதே‌ஷை சேர்ந்த 5 பேர் கைது

1 mins read

கொல்கத்தா: இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பங்ளாதே‌ஷை சேர்ந்த ஐந்து பேரை பர்கானா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நேற்றுக் கைது செய்தனர். இந்தக் கைது குறித்து இந்திய ராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்க எல்லைப் பகுதியான கோஜடங்கா, தராலி ஆகிய இரண்டு இடங்களில் நேற்றிரவு எல்லைப் பாதுகாப்புப் படை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டபோது பங்ளாதே‌ஷை சேர்ந்த ஐந்து பேரும் வெவ்வேறு இடங்களில் பிடிபட்டனர். ஆரம்ப விசாரணையின்போது, ​​இவர்கள் எந்தவித ஆவணங்களும் இன்றி இந்தியாவுக்கு ஊடுருவியுள்ளது தெரியவந்தது.

அவர்கள் அனைவரும் பங்ளாதே‌ஷ் இடைத்தரகர்களின் உதவியுடன் இந்தியாவுக்குள் ஊடுருவியது விசாரணையில் தெரிய வருகிறது.

கைது செய்யப்பட்ட இவர்கள் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு சம்பவத்தில், நேற்றிரவு ராஜ்நகர் மற்றும் கோஜடங்கா பகுதிகளில் பங்ளாதே‌ஷில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் பதுங்க முயன்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை சட்டவிரோதமாக அனைத்துலக எல்லையைக் கடக்க முயன்றதற்காக தெற்கு பங்ளாதே‌ஷ் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் 278 இந்தியர்களையும் 1,214 பங்ளாதே‌ஷியர்களையும் கைது செய்தனர்.