முன்னாள் துணை முதல்வர் வீட்டில் அதிரடி சோதனை

முன்னாள் துணை முதல்வர் வீட்டில் அதிரடி சோதனை

1 mins read
c5956029-79f6-4299-9976-458663254261
நீட் தேர்வு முறைகேட்டில் இவரது நிறுவனத்துக்குத் தொடர்புள்ளதாகவும் ஊடகங்களில் உறுதி செய்யப்படாத ஒரு தகவல் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. -

பெங்களுரு: கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வரா வீட்டில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையால் பரபரப்பு நிலவுகிறது. வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்தச் சோதனை நடைபெற்றதாகத் தெரிகிறது.

இதேபோல் முன்னாள் எம்பி, ஆர்.எல். ஜாலப்பாவின் மகன் ராஜேந்திராவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இருவருக்கும் சொந்தமான, தொடர்புடைய இடங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே சமயத்தில் சோதனை நடத்தியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பரமேஷ்வரா குடும்பத்தார் நடத்தி வரும் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நீட் தேர்வு முறைகேட்டில் இவரது நிறுவனத்துக்குத் தொடர்புள்ளதாகவும் ஊடகங்களில் உறுதி செய்யப்படாத ஒரு தகவல் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.