லக்னோ: இந்தியில் ஓளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ ஓருவர் வலியுறுத்தி உள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த எம்எல்ஏ நந்த் கிஷோர் குஜ்ஜார், நடிகர் சல்மான் கான் வழிநடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் கலாசார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து இந்நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கக் கோரி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ஜவடேகருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா இழந்துவிட்ட பெருமையை, பொலிவை மீ்ட்டெடுப்பதற்காக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மறுபக்கம் இந்திய கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் இத்தகைய நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன என்று நந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க முடியாத வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருப்பதாகவும், இனி தொலைக்காட்சி நிகழ்ச்சி களையும் தணிக்கைக்கு உட் படுத்துவது அவசியம் என்றும் தமது கடிதத்தில் எம்எல்ஏ நந்த் கிஷோர் வலியுறுத்தி இருப்ப தாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

