சாலையோர நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது ஏறிய பேருந்து

சாலையோர நடைபாதையில் படுத்திருந்த எழுவர் மீது பேருந்து  ஏறிய சம்பவத்தில் அவர்கள் உயிரிழந்தனர்.

மேற்கு உத்தரப் பிரதேசத்திலுள்ள புலன்ட்ஷாஹ்ர் மாவட்டத்தில் இந்தத் துயரச் சம்பவம் நடந்தது.  கங்கையாற்றில் தீர்த்தமாடிய பிறகு அவர்கள் சொந்த ஊர் திரும்பும் வழியில் இந்தச் சம்பவம் நடந்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

சம்பந்தப்பட்ட ஓட்டுநரைக் காணவில்லை என்றும் அவர் தற்போது தேடப்பட்டு வருவதாகவும் போலிசார் தெரிவித்தனர்.எழுவரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

 

Loading...
Load next