மலேசியப் பொருட்கள் இறக்குமதியைக் குறைக்க இந்தியா திட்டம்

மலேசியாவில் இருந்து செம்பனை எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக்கொள்வது குறித்தும் மற்ற பொருட்களுக்குக் கட்டுப்பாடு விதிப்பது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றியபோது, இந்தியா காஷ்மீருக்குள் ஊடுருவி, ஆக்கிரமித்துள்ளதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது பேசியிருந்தார். அவரது இப்பேச்சு இந்தியாவை ஆத்திரம் கொள்ளச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

டாக்டர் மகாதீரின் பேச்சு, இந்தியா-மலேசியா இடையிலான வர்த்தக உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்குச் சென்றுள்ளது.

அத்துடன், சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஸாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கும் மலேசியா இதுவரை சாதகமான பதிலைக் கூறவில்லை.

இந்தக் காரணங்களால், தனது அதிருப்தியை வேறு வகையில் வெளிப்படுத்த இந்தியா விரும்புவதாகச் சொல்லப்படுகிறது.

அதற்கேதுவாக, மலேசியாவில் இருந்து செம்பனை எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக் கொண்டு, மற்ற பொருட்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பில் இந்தியாவின் வர்த்தக, தொழில் அமைச்சு நடத்திய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து செம்பனை எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துவிட்டு, இந்தோனீசியா, அர்ஜெண்டினா, உக்ரேன் ஆகிய நாடுகளில் இருந்து அதனை இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டு வருகிறது.

இவ்வாண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் மலேசியாவிடம் இருந்து இந்தியா 3.9 மில்லியன் டன் செம்பனை எண்ணெய்யை வாங்கி இருக்கிறது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. படம்: இந்திய ஊடகம்

13 Dec 2019

சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை நோய் வராது: பாஜக எம்.பி. நாடாளுமன்றத்தில் பேச்சு

பனாமா கால்வாய்க்கும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்துக்கும் இடையே உள்ள சிறு தீவில் நித்தியானந்தா பதுங்கி இருக்கக்கூடும் என குஜராத் காவல்துறை கருதுவதாகக் கூறப்படுகிறது. கோப்புப்படங்கள்: ஊடகம்

13 Dec 2019

அமெரிக்கா சென்ற நித்தியானந்தா சீடர்கள்: வழக்கறிஞர் தகவல்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தூக்குத் தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு நேற்று முன்தினம் நடைபெற்ற ஆந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  படம்: ஊடகம்

13 Dec 2019

ஆந்திரா: பாலியல் வன்கொடுமை: 21 நாட்களில் தூக்கு