கள்ள துப்பாக்கி வைத்திருந்தால் ஆயுள் சிறை: அரசு முடிவு

புதுடெல்லி: கள்ளத்துப்பாக்கி தயாரிப்பது, விற்பது, வைத்திருப்பது போன்ற குற்றங்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் ஆயுதச் சட்டத்தைத் திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இந்தியாவில் இப்போது மொத்தம் 35 லட்சம் துப்பாக்கி உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 13 லட்சம் பேர் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளனர்.

பயங்கரவாதத் தாக்குதல் அதிகம் நடக்கும் காஷ்மீரில் 3.7 லட்சம் பேரும் பஞ்சாபில் 3.6 லட்சம் பேரும் துப்பாக்கி உரிமம் வைத்துள்ளனர். 

இதுதவிர கள்ளத்துப்பாக்கிகளும் பெருமளவில் புழக்கத்தில் உள்ளன. இப்போது ஆயுதச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கிறது.

Loading...
Load next