கைபேசி வெளிச்சத்தில் உடற்கூறு ஆய்வு; பெரும் சர்ச்சை

பாட்னா: பீகார் மாநிலம் பாகாஹா அரசு மருத்துவமனையில் கைபேசி வெளிச்சத்தில் மனித உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதலையால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் ஒரு சிறுவனின் உடல் பாகாஹா அரசு மருத்துவ மனைக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு மின்சாரம் இல்லாததால் உடற்கூறு ஆய்வு மருத்துவர் கைபேசி வெளிச்சத்தில் உடற்கூறு ஆய்வை மேற்கொண்டார்.

காவல்துறை விசாரணைக்கு உடற்கூறு ஆய்வறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படும் நிலையில், பாகாஹா அரசு மருத்துவமனையின் பொறுப்பற்ற செயலுக்குப் பெரும் கண்டனம் எழுந்துள்ளது.