காஷ்மீருக்குத் திரும்பிவர அழைப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு உரிமையை கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு நீக்கியது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வந்தது. என்றாலும் அங்கு இப்போது பதற்றம் அகன்று வருவதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் இன்னமும் பலர் கடைகளைத் திறக்காமல் உள்ளனர்.

இந்நிலையில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, உள்ளூர் செய்தித்தாட்களில் காஷ்மீர் மாநில அரசு முழு பக்க விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.