திரைப்பட வசூலால் பொருளியல் வளர்ச்சி: கருத்துகளை மீட்டுக்கொண்ட அமைச்சர்

திரைப்பட வசூலால் பொருளியல் வளர்ச்சி: கருத்துகளை மீட்டுக்கொண்ட அமைச்சர்

1 mins read
a6771c0a-eb03-4161-9d04-135313dbf0a8
எனது கருத்துகள் சமூக ஊடகங்களில் முற்றுலுமாக திரித்துக்கூறப்பட்டுள்ளது. எனவே எனது கருத்துகளை மீட்டுக்கொள்கிறேன் என்று தனது டுவிட்டில் பதிவுசெய்துள்ளார் இந்தியாவின் சட்டம், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். படம்: ஊடகம் -

பொருளியல் மந்தம் என்று கூறப்பட்டு வருவதை இந்தியாவின் சட்டம், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மறுத்துள்ளார். மூன்று இந்திப் படங்கள் அக்டோபர் 2 காந்தி பிறந்த தினத்தில் வெளியிடப்பட்ட நாளிலேயே 120 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது பொருளியல் வளர்ந்துள்ளதைக் காட்டுவதாக மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். அவரது இந்தக் கருத்தை பலர் வேடிக்கையாக விமர்சித்து வருகின்றனர். அதனையொட்டி அவர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திரைப்படத் தொழிலில் முன்னிலையில் இருக்கும் மும்பையில் நான் இந்தக் கருத்தைக் கூறியது சரியானதே. இருப்பினும் அது சமூக ஊடகங்களில் இது குறித்த விவாதங்களின்போது அது முற்றுலுமாக திரித்துக்கூறப்பட்டுள்ளது. எனவே நான் மும்பையில் கூறிய கருத்துகளை மீட்டுக்கொள்கிறேன் என்று தனது டுவிட்டில் பதிவுசெய்துள்ளார்.