தண்டவாளத்தில் எரிவாயுத்தோம்பு; ரயிலில் மோதவிட்டு காணொளி

தண்டவாளத்தில் எரிவாயுத்தோம்பு; ரயிலில் மோதவிட்டு காணொளி

1 mins read
2cf1a433-e0c7-4343-aa39-48bd1eff2acf
-

சித்தூர்: சித்தூர் ரயில்வே பகுதியில் தண்டவாளத்தில் மர்மமான பொருள்கள் இருப்பதாக ரயில்வே ஊழியர்கள் அடிக்கடி புகார் அளித்து வந்துள்ளனர். ஆனால், விசாரணையில் தகவல் ஏதும் பிடிபடவில்லை.

இதற்கிடையே, ரயில் தண்டவாளத்தில் உள்ள எரிவாயுத் தோம்பு ஒன்று, ரயில் மோதியதும் பறப்பது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. தண்டவாளத்தின் மற்றொரு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதும், பின்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பதும் காணொளியில் தெரிந்தது.

விசாரணையில், தண்டவாளத்தில் எரிவாயுத்தோம்பு ஒன்றை வைத்து, அதனை ரயில் மோதியபோது காணொளி எடுத்த கொங்காரா ராமிரெட்டி எனும் இளைஞரை போலிசார் பிடித்தனர்.

பொறியியல் பட்டதாரியான அவர், ரயில் தண்டவாளத்தில் ரயில் வரும் நேரத்தில் ஏதாவது பொருளை வைத்து அது ரயிலில் மோதும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றி வந்தது தெரியவந்தது. அவர் 'யூடியூப்' ஒளிவளி ஒன்றை நடத்திவந்ததும் கண்டறியப்பட்டது.