புதுடெல்லி: பூஷண் உருக்கு நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்கள், தொழிற்சாலை, எந்திரங்கள் உள்பட ரூ.4,025 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பூஷண் மின்சாரம் மற்றும் உருக்கு நிறுவனம், பல்வேறு வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கியது. ஆனால் அந்தப் பணத்தை முறைகேடாக வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தியதுடன், சட்டவிரோத பணப் பரிமாற்றத்திலும் அந்த நிறுவனம் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதன் தொடர்பில் அந்த நிறுவத்தின்மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கைப் பதிவு செய்தது. முடக்கும் நடவடிக்கைகள் தொடரும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
பூஷண் உருக்கு நிறுவனத்தின் ரூ.4,025 கோடி சொத்துகள் முடக்கம்
1 mins read

