மண்ணுக்குள் உயிருள்ள பெண் குழந்தை கண்டுபிடிப்பு

மண்ணுக்குள் உயிருள்ள பெண் குழந்தை கண்டுபிடிப்பு

1 mins read
94ec0fa6-08f9-4481-8121-ac64cbbc0202
-

உத்தர பிரதேசத்தின் பரேல்லி மாவட்டத்தில் ஆடவர் ஒருவர், மண் சட்டிக்குள் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையைக் கண்டுபிடித்தார். பிறந்த சற்று நேரத்தில் இறந்த தனது மகளை நிலத்தடியில் புதைக்கப்போன அந்த ஆடவர், கடந்த வியாழக்கிழமை இந்தக் குழந்தையைக் கண்டுபிடித்த செய்தி அங்குள்ள வட்டார வாசிகளைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

புதைக்கப்பட்ட அந்தக் குழந்தை மண் சட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.

மூச்சுவிடத் திணறிய அந்தச் சிசுவைக் காப்பாற்றி உடனே மருத்துவமனையில் சேர்த்தார் ஹிதேஷ் குமார் சிரோஹி. அந்தக் குழந்தை தற்போது குணமடைந்து வருகிறது.

அந்தக் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்றவர்களைத் தேடும் முயற்சி தொடர்வதாக பரேல்லி மாவட்ட போலிசார் தெரிவித்தனர்.