அயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை

அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபா் மசூதி வழக்குத் தொடர்பான இறுதிக்கட்ட வாதங்கள் நடக்க உள்ளன. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவம்பா் 17ஆம் தேதியுடன் ஓய்வுபெறுவதால் அதற்குள்ளாக இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்பட உள்ளது. 

இதனை முன்னிட்டு டிசம்பர் 10ஆம் தேதி வரை அயோத்தி யில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் ஜா அறிவித்தார்.