பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: மோடி

பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: மோடி

1 mins read

சண்டிகர்: ஹரியானா சட்டசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர், "நான் தேர்தல் பேரணிக்காக ஹரியானாவுக்கு வரவில்லை. ஹரியானாவே என்னை அழைத் தது. நான் இங்கு வருவதை என்னாலேயே தடுக்க முடிய வில்லை. நீங்கள் எனக்கு அவ்வளவு அன்பைக் கொடுத் திருக்கிறீர்கள்.

"இந்த முறை நமக்கு தீபம் கொண்ட தீபாவளி மற்றும் தாமரை கொண்ட தீபாவளி என இரண்டு வகையான தீபாவளி இருக்கிறது. இந்தத் தீபா வளியை நமது பெண் குழந்தை களுக்கு அர்ப்பணித்து, அவர்களின் சாதனைகளைக் கொண்டாட வேண்டும். பெண் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

"அண்மையில் சீன அதிபர் ஜின்பிங்கை நான் சந்தித்த போது, அவர், 'டங்கல்' திரைப் படத்தில் இந்திய குழந்தைகளின் நடிப்பு சிறப்பாக இருந்ததென கூறினார். இதைக் கேட்டதும் ஹரியானாவை நினைத்து பெருமைப்பட்டேன்," என்றார் மோடி.