ஹரியானா தேர்தலில் 481 கோடீசுவரர்கள்

புதுடெல்லி: ஹரியானாவில் வருகிற 21ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரியானா தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்களில் 481 பேர் கோடீசுவரர்கள் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பாஜக வேட்பாளர்களில் 79 பேர் கோடீசுவரர்கள். அதேபோல காங்கிரஸ் வேட்பாளர்களிலும் 79 பேர் கோடீசுவரர்கள். ஜன நாயக ஜனதாக் கட்சியில் 62 பேர், இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் 50 பேர், பகுஜன் சமாஜ் கட்சியில் 34 பேர் கோடீசுவரர்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.