மத்திய அமைச்சர் மீது மை வீச்சு

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர்  அஷ்வினி சவுபே நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பும்போது, வெளியில் நின்றிருந்த நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில் இருந்து ஒரு நபர் அமைச்சர் அஷ்வினி சவுபே மீது மை வீசினர். இதனால் அவரது ஆடையில் கறை படிந்தது. அங்கிருந்த பத்திரிகையாளர்கள் பொதுமக்கள் சிலர் மீதும் மை விழுந்தது. இதனால் அந்த இடத்தில் பதற்றம் நிலவியது.