நிதியமைச்சர் நிர்மலா: பொருளியல் பலத்தைத் தியாகம் செய்துவிட முடியாது

அனைத்துலக வர்த்தகத் தடைகளுக்குக் கட்டுப்பட இந்தியா விரும்புகிறது. ஆயினும் இந்தியா தனது சொந்த பலத்தையும் உத்திபூர்வ அக்கறைகளையும் கட்டிக்காப்பது அவசியம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

ஜனவரி மாதத்தில் அமெரிக்கா வெனசுவேலா மீது கடுமையான வர்த்தகத் தடைகளை விதித்தது. இந்நடவடிக்கை சில அனைத்துலக வாடிக்கையாளர்களை  பீதியடையச் செய்திருக்கிறது. ஆயினும், கச்சா எண்ணெய் விநியோகிப்பாளர்களுக்குப் பற்றாக்குறை இருப்பதால் இந்தியா தொடர்ந்து வெனசுவேலா எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது.

அமெரிக்காவுடனான பங்காளித்துவத்தை இந்தியா பெரிதும் மதித்தாலும் இந்தியாவும் சிறந்த பொருளியலாக விளங்குவதற்கு அனுமதி தரப்படவேண்டும் என்றார் திருவாட்டி நிர்மலா.