இந்தியா தனது நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்

இந்தியா தனது நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்

1 mins read
0e249e4c-2fa8-43a4-827a-93ca0c30446f
-

இந்தியா தனது நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம் என்று அனைத்துலகப் பண நிதியத்தின் தலைமைப் பொருளியலாளர் கீதா கோபிநாத் தெரிவித்திருக்கிறார்.

2018ஆம் ஆண்டில் இந்தியா அடைந்துள்ள 6.8 விழுக்காடு பொருளியல் வளர்ச்சியின் அடிப்படையில் இவ்வாண்டின் வளர்ச்சி விகிதம் 6.1ஆக இருக்கும் என்று அனைத்துலகப் பண நிதியம், தனது உலகப் பொருளியல் கண்ணோட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

2020ஆம் ஆண்டில் அந்நாட்டின் பொருளியல் 7 விழுக்காடு உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

நிதி அபாயங்கள், வங்கி அல்லாத நிதியியல் பிரிவு, பயனீட்டாளர்களும் சிறிய, நடுத்தர நிறுவனங்களும் எடுத்துள்ள கடன்கள் ஆகியவற்றால் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் திருவாட்டி கோபிநாத் தெரிவித்தார்.

அனைத்துலகப் பண நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் சந்திப்புக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியபோது இந்திய அமெரிக்கரான திருவாட்டி கோபிநாத் இவ்வாறு கூறினார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்த அண்மை நடவடிக்கைகளைத் திருவாட்டி கோபிநாத் பாராட்டியபோதும் மேலும் பல நடவடிக்கைகள் தேவைப்படுவதாகத் தெரிவித்தார். வர்த்தக வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்புகளைச் சரிசெய்வது, எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று என அவர் கூறினார்.