உலகளாவிய பசி குறியீடு: 102வது இடத்தில் இந்தியா

உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்தின்மை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 102வது இடத்தில் உள்ளது. இந்த ஆய்வு 117 நாடுகளில் நடத்தப்பட்டது.

2014ஆம் ஆண்டில் 77 நாடுகளில் இந்தியா 55வது இடத்தில் இருந்தது.

உலகளாவிய, தேசிய மற்றும் வட்டார நிலைகளில் பசி குறித்து அளவிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் பசிக்கு எதிரான திட்டங்களில் முன்னேற்றம் மற்றும் பின்னடைவுகளை மதிப்பிடுவதற்கும் வருடாந்திரக் குறியீட்டுப் பட்டியல் வடிவமைக்கப்படுகிறது.

தெற்காசிய நாடுகளில் இந்தியா இப்போது பாகிஸ்தான் (94) பங்ளாதேஷ் (88), இலங்கை (66) ஆகியவற்றுக்கும் கீழே உள்ளது.

பசியுடன் போராடுவதில் நேப்பாளம் மற்றும் பங்ளாதேஷ் ஆகிய தெற்காசியா நாடுகளின் முயற்சிகளையும் ஆய்வு அறிக்கை பாராட்டுகிறது.

இந்தப் பட்டியலில் இந்தியாவில் குழந்தைகள் வீணாக்கும் உணவு 20.8 விழுக்காடு என்று குறிப்பிட்டுள்ளது. இது மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் பசி

பட்டியலிலும் இந்தியா பின்னோக்கியே செல்கிறது என்றும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது. இதை உடனடியாக கவனத்தில் கொள்வது அவசியம் என்று குறியீட்டுப் பட்டியல் தெரிவித்தது.

‘வெல்துங்கர்ஹில்ஃப்’ மற்றும் ‘கன்சர்ன் வேர்ல்டுவைட்’ ஆகியவை தயாரித்த அறிக்கையின்படி, கடுமையான பசி உள்ள 45 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்தியாவில், ஆறு முதல் 23 மாதங்களுக்கு இடைப்பட்ட அனைத்து குழந்தைகளில் வெறும் 9.6 விழுக்காட்டினருக்கு மட்டுமே குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவு அளிக்கப்படுகிறது.

2015-2016 நிலவரப்படி, 39 விழுக்காடு வீடுகளில் சுகாதார வசதிகள் இல்லை என ஆய்வு அறிக்கைகள் கூறுகிறது.

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை ‘வெளிப்புறக் கழிப் பிடமற்ற நாடாக அறிவித்த அறிவிப்புக்கு முற்றிலும் மாறாக, வெளிப்புறங்களைக் கழிப்பிடங் களாகப் பயன்படுத்துவது இந்தியாவில் இன்னும் நடைமுறையில் உள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.

இதை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் இருப்பதை உறுதி செய்யும் ‘தூய்மையான இந்தியா’ திட்டத்தை 2014ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.

புதிய கழிவறை கட்டுமானத்துடன் கூட, வெளிப்புறங்களைக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துவது இன்னும் நடைமுறையில் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!