இந்தியாவின் வளர்ச்சி 6.1% ஆக சரியும்

இந்தியாவின் வளர்ச்சி 6.1% ஆக சரியும்

1 mins read

வாஷிங்டன்: அனைத்துலக நாணய நிதியமான ஐஎம் எஃப் 2019-20ஆம் ஆண்டுக்கான --இந்தியா வின் பொருளாதார வளர்ச்சி 6.1%ஆக குறையும் என்று கணித்துள்ளது.

இது கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட 7.3% கணிப்பை விட 1.2% குறைவாகும்.

கடந்த 2018ல் நாட்டின் வளர்ச்சி விகிதம் 6.8% ஆக இருந்தது. வளர்ச்சி விகிதத்தில் ஏறத்தாழ 1% இப்போது குறைக்கப்பட் டுள்ளபோதிலும் வேகமாக வளரும் நாடுகளில் முதல் இடத்தை இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டுள்ள தாகவும் ஐஎம்எஃப் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.