3,50,000 வைரங்களுடன் கார்

மும்பை: வைரக் கண்காட்சி மும்பையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியில் அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, தெனாப்பிரிக்கா,      சவூதி அரேபியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான வணிகர்கள் கலந்துகொண்டனர். 

வைர வியாபாரிகள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கண்காட்சியில் வைரத்தால் அலங்கரிக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. இந்தக் காரில் 3,50,000 வைரங்கள்  ஒட்டப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.