புலிகளும் இப்படித்தானா? பெண்புலிக்காக சீறிப்பாய்ந்து சண்டையிட்ட சகோதரர்கள்

பெண்புலிக்காக இரண்டு ஆண்புலிகள் கடும் சீற்றத்துடன் சண்டையிட்டுக்கொள்வதைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.

ராஜஸ்தானின் ரத்தம்பூர் தேசியப் பூங்காவில் உள்ள ‘சிங்ஸ்த்’ எனப் பெயரிடப்பட்ட புலியும், ‘ராக்கி’ எனப் பெயரிடப்பட்ட புலியும் இந்தச் கடும் சண்டையில் ஈடுபட்டதாகவும் இவை இரண்டும் சகோதரர்கள் என்றும் இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் குறிப்பிட்டார். இவ்விரு புலிகளின் தாயார் ‘ஷர்மிலி’ என்று குறிப்பிட்ட கஸ்வான், இந்தக் காணொளியை சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

‘நூர்’ எனப் பெயரிடப்பட்ட பெண் புலிக்காகவே இவ்விரு சகோதரர்களும் சண்டையிட்டுக்கொண்டதாகவும் திரு கஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சண்டையில் 'சிங்ஸ்த்' வென்றதாகவும் எந்தப் புலிக்கும் கடுமையான காயம் இல்லை எனவும் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட பெண் புலி காணொளியின் தொடக்கத்தில் அங்கிருந்து ஓடுவதைக் காணலாம் என்றார்.