சிபிஐ குற்றப்பத்திரிகை: இந்திராணி-சிதம்பரம் பணத் தொடர்பு

சிபிஐ குற்றப்பத்திரிகை: இந்திராணி-சிதம்பரம் பணத் தொடர்பு

1 mins read

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்குத் தொடர்பில் சிபிஐ தரப்பில் 2,000 பக்கத்திற்கு குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜியிடம் தனது மகன் நிறுவனத்திற்கு ரூ. 10 லட்சம் அனுப்புமாறு ப.சிதம்பரம் கேட்டதாக அந்தக் குற்றப்பத்திரிைக கூறுகிறது.

இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜி இருவரும் சிதம்பரத்தை சந்தித்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் சிதம்பரம் அந்நிய முதலீடு பெற ஒப்புதல் அளிக்க தனது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனத்திற்குப் பணம் போடச் சொன்னதாகவும் அதன்படி ரூ.996,000 கைமாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களான பீட்டர் முகர்ஜியும் இந்திராணி முகர்ஜியும் தங்களது சொந்த மகள் ஷீனா போராவைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிறகு இந்திராணி அரசு தரப்பு சாட்சியமாக மாறி கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிபிஐயிடம் இந்த வழக்குத் தொடர்பில் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திராணி அரசுத் தரப்பு சாட்சியமாகிவிட்டதால் அவரிடம் எந்த விசாரணையும் இராது எனசிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.