பாகிஸ்தானுக்குப் பதிலடி தந்த இந்தியா

பாகிஸ்தானுக்குப் பதிலடி தந்த இந்தியா

1 mins read
dcd9b9f1-7f4d-4b12-80fc-14c9408e0945
-

காஷ்மீரில் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் ராணுவத்துக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. சண்டை நிறுத்த விதிமுறைகளை பாகிஸ்தான் படையினர் மீறி தாக்குதல் நடத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய பாகிஸ்தான் ராணுவம் உதவ முயன்றதாகவும் அதற்காக இந்திய வீரர்களின் கவனத்தை சிதறடிக்க தாக்குதல் நடத்தியதாகவும் இந்தியா கூறியது.

பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் இருவரும் பொதுமக்களில் ஒருவரும் மரணம் அடைந்தனர். பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பீரங்கிப் படைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியது.

இந்தியப் படைகள் நடத்திய தாக்குதலில் தனது தரப்பில் ஆறு பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது. மாண்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்று அது கூறியது. மேலும் எட்டு பேர் காயமுற்றதாகவும் பாகிஸ்தான் ராணுவம் கூறியது.

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது தொடர்பாக ஆளும் பாஜகவினர் அமிர்தசரசில் நேற்று ஆடிப் பாடி கொண்டாடினர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது.