திருமணத்திற்குச் சென்று திரும்பிய ஆறு பேர் விபத்தில் பலி

திருமணத்திற்குச் சென்று திரும்பிய ஆறு பேர் விபத்தில் பலி

1 mins read

ஹைதராபாத்: தெலுங்கானாவில் கால்வாய்க்குள் கார் பாய்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய நண்பர்கள் 11 பேர் சூர்யாபேட்டையில் நடைபெற்ற நண்பரின் திருமணத்திற்கு இரண்டு கார்களில் சென்றனர். அதன் பின்னர் ஹைதராபாத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். சூர்யாபேட்டை மாவட்டம் கக்கிராலா பகுதியைக் கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் நாகார்ஜுனா சாகர் ஆற்றின் கால்வாயில் பாய்ந்தது.

கால்வாயில் 18 அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்தோடிய நிலையில் காருக்குள் இருந்தவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 15 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் காரையும் அதில் சடலமாக கிடந்த ஆறு பேரையும் மீட்புக்குழுவினர் மீட்டனர்.