போபால்: இந்தியாவின் வட மாநிலங்களில் கார்வா சாத் என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை நாளில் பெண்கள் நாள் முழுவதும் விரதமிருந்து சல்லடையின் வழியாக இரவில் நிலவைப் பார்ப்பார்கள்.
பழங்காலங்களில் பொருள் தேடிச்செல்லும் கணவனுக்காக மனைவி செய்யும் விரதமாகக் கடைப்பிடிக்கப்பட்ட இந்த வழக்கம் இன்றும் வட இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. இந்த பண்டிகை கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள சித்ரகூட் பகுதியில் கிருஷ்ணா என்பவர் ஷோபா, ரீனா, பிங்கி என்ற மூன்று சகோதரிகளை 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த சகோதரிகளில் மூன்றுபேரும் ஒன்றாகச் சேர்ந்து கார்வா சாத் விரதமிருந்து தங்களின் ஒரே கணவனின் நலன் வேண்டி சல்லடை வழியாக நிலவைப் பார்த்தனர். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

