கொச்சி: கேரளாவின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கொச்சியில் நேற்று முன்தினம் முதலே விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இதனால் நகரின் தாழ்வான இடங்க ளில் தண்ணீர் சூழ்ந்தது. சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங் கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்ததால் கொச்சியில் உள்ள எல்லா பள்ளிக்கூடங்களுக் கும் நேற்று விடுமுறை விடப்பட்டது. இதுபோல ஆலப்புழா, கோட்டயம், உட்பட பிற பகுதிகளி லும் கனமழை பெய்து வருகிறது.

