33,000 இந்திய ஊடகச் செய்திகள் பொய்யானவை என்கிறது ஆய்வு

33,000 இந்திய ஊடகச் செய்திகள் பொய்யானவை என்கிறது ஆய்வு

1 mins read

புதுடெல்லி: மக்களவை தேர்தலின்போது சமூக வலைத்தளங்களில் 50 ஆயிரம் பொய் செய்திகள் வெளியானதாக தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தப் பொய் செய்தி பதிவுகளை 20 லட்சம் பேர் பகிர்ந்துள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் 'லாஜிகல்லி (Logically)' என்ற தனியார் நிறுவனம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் செய்திகள் குறித்து ஆய்வு நடத்தியது.

ஆய்வில், சமூக வலைத்தளங்களில் பொய்ச் செய்திகள்தான் அதிகளவில் பரப்பப்படுகிறது என்பதைக் கண்டறிந்தது. ஆய்வு குறித்து அந்த தனியார் நிறுவனம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.

அந்த அறிக்கையில், "எங்கள் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தல் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது இருந்தே கண்காணிக்கத் தொடங்கியது. அதன்படி, பொய்யாகச் சித்திரிக்கப்படும் செய்திகள் 15 லட்சம் பேரால் பகிரப்பட்டன.

"பெரும்பாலான இணையவாசிகள் வெறுக்கும் வகையிலான கட்டுரைகள் 3 லட்சத்துக்கும் அதி கமாகப் பகிரப்பட்டன.

"9 லட்சத்து 44 ஆயிரத்து 486 கட்டுரைகளை ஆய்வு செய்ததில் 14.1 விழுக்காடு (1,33,167) நம்பகத்தன்மை அற்றவை. 25 விழுக்காடு பொய்ச் செய்திகள்.

"மக்களவைத் தேர்தலின்போது பதிவேற்றம் செய்யப்பட்ட 1 லட்சத்து 33 ஆயிரம் 167 செய்திகளில் இந்திய ஊடகங்கள் வெளியிட்ட 33,000 செய்திகள் பொய்யானவை," என்று அறிக்கை கூறுகிறது.