பனாஜி: கோவா மாநிலத்தில் சாலைகளில் சுற்றித் திரிந்த பசு மாடுகள் பனாஜியில் உள்ள கோசாலையில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கலங்கட் பகுதி சாலையில் சுற்றித் திரிந்த இந்த 76 பசு மாடுகளும் கோழி, ஆட்டிறைச்சி மற்றும் மீன் வறுவல் உள்ளிட்ட அசைவ உணவுகளை மட்டும்தான் தின்கின்றன. இந்த மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிந்தபோது ஹோட்டல்களில் இருந்து வீசப்பட்ட அசைவ உணவுகளைத் தின்று பழகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கோவா மாநில அமைச்சர் மைக்கேல் லோபோ இதனை தெரிவித்துள்ளார். மாடுகளை அசைவ பழக்கத்திலிருந்து சைவத்திற்கு மாற்று வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கோழி இறைச்சி தின்னும் மாடுகள்
1 mins read

