முக்கியமான மாநில வாக்கெடுப்புகளில் பாஜக முன்னிலை

முக்கியமான மாநில வாக்கெடுப்புகளில் பாஜக முன்னிலை

1 mins read
5776ea2e-7f3b-46ef-8b31-a767938fd3a3
-

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுங்கூட்டணி, இரண்டு மாநிலத் தேர்தல்களில் தற்போது முன்னிலை பெற்றுள்ளதாகத் தொலைக்காட்சி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் அந்தக் கட்சியின் அதிகாரம் இந்தியாவில் மேலும் கூடியுள்ளது.

மஹாராஷ்ராவில் 288 இடங்களைக் கொண்ட சட்டசபையில், மாநிலக் கட்சி ஒன்றின் துணையுடன் பாஜக 177 இடங்களைப் பெற்றுள்ளது.

ஹர்யானா மாநிலத்தில் முன்னணி வித்தியாசம் குறைவாக உள்ளது. காங்கிரஸ் கட்சி வழிநடத்தும் கூட்டணியைக் காட்டிலும் 40 இடங்கள் அதிகமாகப் பெற்று பாஜக முந்திக்கொண்டது. இருந்தபோதும், பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவைப்படும் கூடுதலான நான்கு இடங்களை பாஜக இன்னும் பெறவில்லை.

இவ்வாண்டு நிகழ்ந்த தேசிய பொதுத்தேர்தலில் வெற்றியடைந்த பிறகு பாஜக எதிர்கொண்டுள்ள முதல் மாநிலத் தேர்தல்கள் இவை.