புதுடெல்லி: சீனப் பட்டாசுகளின் சட்ட விரோத இறக்குமதி, விற்பனை, கொள்முதல் என எல்லாவற்றுக்கும் மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சுங்கத்துறை முதன்மை ஆணையர் விடுத்துள்ள அறிவிப்பில், "பட்டாசுகள் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சீனப் பட்டாசுகளைக் கொண்டு சென்றாலோ, வைத்திருந்தாலோ, மறைத்தாலோ, விற்பனை செய்தாலோ, வாங்கினாலோ, எந்த வகையில் கையாண்டாலும் அது சுங்க சட்டம் 1962-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம்," எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை கடத்திக்கொண்டு வருவதும், இந்திய சந்தைகளில் அவற்றை விற்பனை செய்வதும் கடுமையாக கவனத்தில் கொள்ளப்படும் எனவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சீனப் பட்டாசுகளைப் பயன்படுத்துவது வெடிபொருட்கள் சட்ட விதிகள், 2008-ன் கீழ் கெடுதியானது; ஏனெனில் அவற்றில் சிவப்பு ஈயம், காப்பர் ஆக்சைடு, லிதியம் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் இருப்பதால் அவை ஆபத்தானவை. சுற்றுச்சூழலுக்கும் எதிரானவை. சீன பட்டாசுகளை வாங்குவது இந்திய பொருளாதாரத்தைப் பாதிக்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
'சீனப் பட்டாசு விற்றாலும் வாங்கினாலும் தண்டனை'
1 mins read

