ஹைதராபாத்: தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநரான திருமதி தமிழிசை சௌந்தரராஜன் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனம் ஆடியது சமூக வலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மிகவும் எளிமையானவர் என்ற பெயரையும் மக்கள் மத்தியில் அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. தெலுங்கானாவில் உள்ள பழங்குடியின மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள், இடஒதுக்கீடு, நிதி ஒதுக்கீடு, பாதுகாப்பு அம்சங்கள், அவர்களின் மருத்துவ முறையை உலகறியச் செய்வது குறித்து நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகையில் ஆலோசனை நடத்தினார். பத்ராச்சலம் மற்றும் நாகர்கர்ணூல் மாவட்டங்களில் இருந்து அங்கு வந்திருந்த கோயா மற்றும் லம்பாடா மக்களுடன் கலகலப்பாக உரையாடிய தமிழிசை, அவர்களுடன் சேர்ந்து கோயா இன மக்களின் பாரம்பரிய இசைக்கு ஏற்றபடி நடனம் ஆடினார்.
பழங்குடி மக்களுடன் நடனமாடிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை
1 mins read

