தேவகவுடா, குமாரசாமிக்கு அதிர்ச்சி அளித்த எம்எல்ஏக்கள்

தேவகவுடா, குமாரசாமிக்கு அதிர்ச்சி அளித்த எம்எல்ஏக்கள்

1 mins read

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவரது மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த சுமார் 20 எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு விலகப்போவதாக திடீர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. இதனால் அந்தக் கட்சியின் தலைவர் தேவகவுடா, குமாரசாமி ஆகியோர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். அதனையடுத்து நேற்று முன்தினம் தேவகவுடா அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பேசி சமாதானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கர்நாடக மாநில உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டு சேராமல் தனித்துப் போட்டியிடப்போவதாக திரு தேவகவுடா கூறியுள்ளார்.