'இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்கலாம்'

'இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்கலாம்'

1 mins read

சென்னை: தீபாவளி கொண்டாட்டம் என்றாலே பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது பட்டாசுகள், புத்தாடைகள், விதவிதமான இனிப்பு, கார பலகாரங்கள்தான்.

இந்த ஆண்டு தீபாவளி வரும் 27ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த தீபாவளி அன்றும் கடந்த ஆண்டைப் போலவே இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கவேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என்றும் தடையை மீறி மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாரியம் எச்சரித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் திறந்தவெளியில் ஒன்று கூடி பொதுமக்கள் பட்டாசு வெடிக்கலாம். அதிகளவு ஒலி எழுப்பும் பட்டாசுகள், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய பட்டாசுகளைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்கமுடியும் என்ற அரசின் கட்டுப்பாடு சிறுவர்கள், இளையோர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.