திண்டுக்கல்: தனது சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு தன்னை அனாதையாக தவிக்கவிட்டுச் சென்ற பேரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திண்டுக்கல் கோட்டாட்சியர் உஷாவிடம் புகார் மனு அளித்துள்ளார் பாட்டி ஒருவர்.
திண்டுக்கல் அடுத்துள்ள கல்லாத்தூர் பட்டியைச் சேர்ந்தவர் கித்திரியம்மாள். இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது இரண்டாவது மகளின் மகனான ஆரோக்கியத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கித்திரியம்மாளை காணாததால் மற்ற மகன்களும் மகள்களும் அவரைத் தேடியபோது கித்திரியம்மாள் பிச்சை எடுத்து வந்தது தெரியவந்தது.
அவரிடம் விசாரித்தபோது, தனது இரண்டரை ஏக்கர் விளைநிலத்தை பேரன் ஆரோக்கியம் எழுதிவாங்கிக் கொண்டு அனா தையாக விட்டுச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கித்திரியம்மாள் சொத்தை மீட்டுத் தரக்கோரியும் பேரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் அளித்துள்ளார்.

