வசதி குறைந்தவர்களும் புத்தாடை அணிந்து தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சென்னையைச் சேர்ந்த துணி வியாபாரி ஒருவர். ஒரு ரூபாய்க்குச் சட்டையையும் பத்து ரூபாய்க்கு 'நைட்டி'யையும் விற்க, அதனால் பலனடைந்த பலரும் அவரை வாழ்த்திச் சென்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த திரு ஆனந்த், இம்மாதம் 19ஆம் தேதி முதல் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார். தம்மால் மற்ற வியாபாரிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில், நாள்தோறும் காலையில் ஒரு மணி நேரம் மட்டும் இதுபோல வழங்கி வருவதாக அவர் கூறினார். நாளொன்றுக்கு 200 பேருக்கு 'டோக்கன்' வழங்கியதால் அதிகாலையிலேயே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து துணிகளை வாங்கிச் சென்றனர். எதையும் இலவசமாகக் கொடுத்தால் அதற்கு மதிப்பு இருக்காது என்பதால் ஒரு ரூபாயை மட்டும் வாங்கிக்கொண்டு சட்டை விற்று வருவதாக திரு ஆனந்த் குறிப்பிட்டார்.
ரூ.1க்கு சட்டை, ரூ.10க்கு 'நைட்டி': வர்த்தகரின் மனிதநேயம்
1 mins read
-

