மீண்டும் முதல்வராக பதவியேற்ற கட்டார்

மீண்டும் முதல்வராக பதவியேற்ற கட்டார்

1 mins read

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பாஜகவின் மனோகர் லால் கட்டார் நேற்று பதவியேற்றார்.

ஜேஜேபி எனப்படும் ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகப் பதவியேற்றார்.

ஹரியானா மாநிலத்தில் அமைந்த முதல் பாஜக அரசின் முதல்வராக கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பொறுப்பேற்ற மனோகர் லால் கட்டார், இரண்டாவது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்

மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்று வாக்கு எண்ணிக்கை 24ஆம் தேதி நடைபெற்றது.

அதில் பாஜக 40 இடங்களையும் காங்கிரஸ் 31 இடங்களையும் ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களையும் கைப்பற்றின.

அரியானாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை யில், திடீர் திருப்பமாக ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில், ஹரியானாவின் முதல்வராக இரண்டாவது முறை யாக மனோகர் லால் கட்டார் பதவியேற்றுக்கொண்டார். துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா அவர்களுக்கு பதவிப்பிர மாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.