திருப்பதி: திருப்பதியில் உள்ள விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றும் விரிவாக்கப் பணிகளுக்காக 10 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்களவை உறுப்பினா் துா்கா பிரசாத் தெரிவித்தாா்.
திருப்பதியில் அவர் செய்தியாளா்களிடம் கூறுகையில், "திருப்பதியில் உள்ள விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக மாற்றும் உத்தரவு கடந்த ஆட்சியின் போது வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கான விரிவாக்கப் பணிகள் எதையும் அவா்கள் சரிவர செய்யவில்லை. இதுகுறித்து ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவா் விமான நிலைய விரிவாக்கப் பணிக ளுக்காக 10 ஏக்கா் நிலம் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தாா். அதன்படி, தற்போது நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, விரிவாக்கப் பணிகள் தொடங் கப்பட்டுள்ளன.
இன்னும் மூன்று மாத காலத்தில் அனைத்துலக விமானச் சேவை முழு அளவில் தொடங்கப்படும். 6 மாத காலத்துக்குள் சரக்கு விமானப் போக்குவரத்தும் திருப்பதியிலிருந்து தொடங்கப்படும். பன்னாட்டு விமான சேவையுடன் உள்நாட்டு விமான சேவைகளும் அதிகரிக்கப்படும் என்றாா்.

