புதுடெல்லி: பிரதமர் மோடியின் சவுதி அரேபியா பயணத்தின்போது விமானம் தங்களது வான் எல்லை வழியாகச் செல்ல பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது.
சவூதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இருநாள் பயணமாக இன்று 29ஆம் தேதி அங்கு செல்கிறார். சவூதியில் தங்கி இருக்கும் அவர் ரியாத்தில் நடைபெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்ற அமர்வில் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் சவூதி அரேபியா பயணத்தின்போது விமானம் தங்களது வான் எல்லை வழியாகச் செல்ல பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்த வேண்டுகோளிற்கு, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி மறுப்பு தெரிவித்து வெளியுறவுத் துறை உயர் அதிகாரி ஒருவருக்கு எழுத்துபூர்வமாக அறிக்கை அனுப்பியுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

