பட்டாசுகளைக் கொளுத்தி வீசியெறிந்த விழாவில் 40 பேர் காயம்

பட்டாசுகளைக் கொளுத்தி வீசியெறிந்த விழாவில் 40 பேர் காயம்

1 mins read

போபால்: மத்தியப் பிரதேசத்தில் பட்டாசுகளைக் கொளுத்தி ஒருவர் மீது ஒருவர் வீசியெறியும் வினோத திருவிழாவில் 40 பேர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தில் உள்ள கௌதம்புரா என்ற கிராமத்தில் தீபாவளிக்கு அடுத்த நாளில் ஹிங்கோத் போர் என்ற திருவிழா ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவின் போது பட்டாசுகளைக் கொளுத்தி ஒருவர் மீது ஒருவர் வீசி விளை யாடுவதே முக்கிய நோக்கம் ஆகும். அப்படி பட்டாசுகளை வீசி யதில் 40 பேர் காயமடைந்தனர்.