'64 குழந்தைகளை அதிகாரிகளின் பணத்தாசை கொன்றுவிட்டது'

'64 குழந்தைகளை அதிகாரிகளின் பணத்தாசை கொன்றுவிட்டது'

1 mins read
bc1f5fd0-4ff3-489c-ac1b-acc024a2c955
-

போபால்: அதிகாரிகளின் 10% கமிஷன் பெறவேண்டும் என்ற பேராசையால்தான் 64 குழந்தைகள் உயிரிழந்தனர் என்று கைதாகி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள மருத்துவர் கபீல் கான் அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 'ஆக்சிஜன்' பற்றாக்குறை காரணமாக 64 குழந்தைகள் 2017ல் இறந்தனர். அவர்கள் அனைவரும் என்ன வென்று கண்டுபிடிக்கமுடியாத மர்ம காய்ச்சல் காரணமாக இறந்ததாகக் கூறப்பட்டது. இந்த விவகாரம் நடந்தபோது இந்த மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவராக கபீல் கான் என்பவர்தான் பணிபுரிந்துகொண்டிருந்தார்.

குழந்தைகள் இறப்புக்கே மருத்துவரின் கவனக்குறைவே காரணம் என்றும் அப்போது கூறப்பட்டது. குழந்தைகள் இறந்தது தொடர்பில் இந்த மருத்துவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், "ஆக்சிஜன் சப்ளை' செய்யும் நிறுவனத்திற்கு நிலுவை யில் இருந்த தொகை வழங்கப்பட வில்லை. இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வரை அந்நிறுவனம் புகார் அளித்தது. ஆனால் அவர்க ளிடம் 10% கமிஷனை எதிர்பார்த்து அந்தத் தொகையை முறைப்படி கொடுக்காமல் அதிகாரிகள் நிறுத்திவைத்தனர். குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பலியாகவில்லை. அவர்கள் அதிகாரிகளின் பேராசை யால் படுகொலை செய்யப்பட்டனர்," என்று கபீல் கான் தெரிவித்துள்ளார்.