சிதம்பரத்துக்கு கொசு வலை

சிதம்பரத்துக்கு கொசு வலை

1 mins read

புதுடெல்லி: முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு இடைக்கால பிணை வழங்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அதே சமயத்தில் அவருக்கு கொசுவலை வழங்க அது உத்தரவு பிறப்பித்தது.

'ஐஎன்எக்ஸ் மீடியா' வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் சிதம்பரத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரை பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், சிதம்பரத்துக்கு இடைக்கால பிணை வழங்க மறுத்ததோடு, திகார் சிறையில் அவருக்கு கொசுவலை கொடுக்க வேண்டும் என்றும் புறநோயாளியாக சிகிச்சை அளிக்கலாம், ஆனால் சிறப்பு சிகிச்சை தேவையில்லை, ஒரு வேளை தேவை ஏற்பட்டால் எய்ம்ஸ் மருத்துவமனையில் வாரம் ஒரு முறை சிகிச்சை அளிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் வயிற்று வலி ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிதம்பரம் சிகிச்சை பெற்றாா்.

இந்நிலையில், தாம் வழக்கமாக சிகிச்சை பெறும் ஹைதராபாத்தைச் சோ்ந்த நாகேஸ்வர ரெட்டியிடம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, ஆறு நாட்கள் இடைக்கால பிணை வழங்கக் கோரி சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தாா்.