புதுடெல்லி: பிரதமர் மோடி வட இந்திய நட்சத்திரங்களுடன் காட்டும் நெருக்கத்தை தென்னிந்திய நடசத்திரங்களிடம் எப்போதுமே காட்டுவதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் பிரதமர் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்ட வட இந்திய நட்சத்திரங்களைக் காட்டிலும் தென்னிந்திய நட்சத்திரங்கள் மிகவும் பாரபட்சமாகவே நடத்தப்பட்டதாக பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வீட்டில் மற்ற வட இந்திய நடிகர்கள் கைபேசியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்த போது எனக்கு மட்டும் அந்த அனுமதி கிடைக்கவில்லை என எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிருப்தி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளைக் கொண்டாடுவது குறித்து அண்மையில் பிரதமர் மோடி, சினிமா பிரபலங்கள் பலரை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதில் பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், அமீர்கான், கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் உடனான ஆலோசனைக்கு பிறகு சினிமா பிரபலங்கள், பிரதமர் மோடியுடன் ஃசெல்பி எடுத்துக்கொண்டனர். இந்நிலையில் இதுபற்றி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது ஃபேஸ்புக்கில் கருத்து பகிர்ந்து ள்ளார். அக்டோபர் 29 அன்று பிரதமர் மோடி அளித்த விருந்தில் அவரால் நான் கலந்துகொண்டேன். நாங்கள் உள்ளே செல்வதற்கு முன் நுழைவாயிலிலேயே எங்களின் கைபேசிகளை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுக்கவேண்டுமென வலி யுறுத்தப்பட்டோம். அதற்காக 'டோக்கன்' கொடுக்கப்பட்டது. ஆனால் அதேநாளில் பல சினிமா பிரபலங்கள் பிரதம ருடன் ஃசெல்பி எடுத்துக் கொண்டது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

