பயணிக்கு மூச்சுத் திணறல்; விமானத்தை நிறுத்திய விமானி

பயணிக்கு மூச்சுத் திணறல்; விமானத்தை நிறுத்திய விமானி

1 mins read
bcf1b540-37f6-4dbf-b9dd-02312834e4ca
-

சென்னை: பெங்களூரு புறப்பட்ட விமானத்தில் பயணி ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, பயணியைப் பாதுகாப்பாக மருத்துவரிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு மணிநேரம் கழித்து தாமதமாக பெங்களூரு புறப்பட்டுச் சென்றது விமானம்.

சென்னையில் இருந்து இன்று காலை 'ஏர் இந்தியா' விமானம் 84 பயணிகளுடன் பெங்களூரு புறப்பட்டது. இந்த விமானம் ஓடுபாதையில் ஓடத்துவங்கிய நிலையில் அதில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த 43 வயது சுஜித் சுனிலுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட விமானி ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தி, சுஜித் சுனிலை விமான நிலைய மருத்துவமனையில் சேர்த்தனர்.