லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் உள்ள துணை ராணுவப் படை முகாமின் மீது கடந்த 2008ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் சிலர் நடத்திய தாக்குதலில் வீரர்கள் எழுவர் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில், இம்ரான் ஷாஜாத், முகம்மது ஃபரூக், முகம்மது ஷரிஃப், சபாவுதீன் ஆகிய நால்வருக்கு நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஜங் பகதூர் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் ஃபைம் என்பவருக்கு பத்தாண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
பயங்கரவாதத் தாக்குதல்; நால்வருக்கு மரண தண்டனை
1 mins read

