பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்று வந்த கூட்டணி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான அனைத்து திட்டங்களையும் வகுத்தது பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாதான் என்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தெரிவித்தது பரபரப்புக்கும் புதிய விவாதங்களுக்கும் வித்திட்டுள்ளது.
முதல்வர் எடியூரப்பாவின் குரலில் ஒலிக்கும் ஒலிப்பதிவு தொகுப்பு ஒன்று தற்போது கசிந்துள்ளது. அதில், கர்நாடகாவில் நடைபெற்று வந்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது குறித்து பல தகவல்களை எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்கள், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மூன்று எம்எல்ஏக்கள் திடீரென அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர்.
இதையடுத்து முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. அதன் பின்னர் எடியூரப்பா முதல்வரானார்.
இந்நிலையில், 17 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியைத் துறக்க வைத்தது தாம் அல்ல என்று எடியூரப்பா பாஜக எம்எல்ஏக்களிடம் கூறுவது அந்த ஒலித்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
"கட்சியின் தேசியத் தலைவர்தான் அனைத்தையும் திட்டம் போட்டு நடத்தினார். அதிருப்தி எம்எல்ஏக்களை மும்பையில் உள்ள தங்குவிடுதியில் தங்க வைத்ததும் அவர்தான்.
"உண்மையில் மீதமுள்ள ஆட்சிக் காலம் முழுவதும் நாம் எதிர்க்கட்சியாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், 17 பேர் தங்கள் பதவிகளைத் துறந்து நம்மை ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள்.
"தற்போது அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளனர். என்ன நடந்தாலும் அவர்களுக்கு நாம் துணையாக இருக்க வேண்டும்," என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
இந்த ஒலிப்பதிவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், கட்சியின் நலன் கருதி இவ்வாறு பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பதவி வில-கிய அதி-ருப்தி எம்-எல்-ஏக்-கள் குறித்து பாஜக தரப்-பில் சிலர் தேவை-யின்றி கருத்து தெரி-வித்-தி-ருப்-ப-தா-க-வும் அவர் கூறி-யுள்-ளார்.
கூட்-டணி அரசு கவிழ்ந்-த-தற்-கும், 17 எம்-எல்-ஏக்-கள் பதவி வில-க-வும் பாஜக கார-ணம் அல்ல என்று முதல்-வர் எடி-யூ-ரப்பா கூறி வந்த நிலை-யில், அதற்கு நேர்- மா-றாக ஆட்-சிக் கவிழ்ப்-புக்கு பாஜக தேசி-யத் தலை-வர்தான் திட்-ட-மிட்-டார் என்று அவரே கூறி-யி-ருப்-பது தற்-போது பர-ப-ரப்பை ஏற்-ப-டுத்தி உள்-ளது.
இதற்-கி-டையே, கர்-நா-ட-கா-வில் பாஜக அரசை உடனே கலைக்க வேண்-டும் என்று வலி-யு-றுத்தி அதி-ப-ருக்கு காங்-கி-ரஸ் கடி-தம் அனுப்பி உள்ளது.

